சொல் பொருள்
(1) பரவாத களவு; என்னை? “அம்பலும் அலரும் களவு” (இறையனார் அகப்பொருள். 22) என்றார் ஆகலின். (திருக்கோ. 180. பேரா.)
(2) ஒரு குமரியின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் எனவும், வெளிப் படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர் பெறும். (தமிழ்க்காதல். 71.)
பெ) தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தைப் பற்றி ஊரில் சிலர் கூடிப்பேசும் பழிச்சொற்கள்
சொல் பொருள் விளக்கம்
தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தைப் பற்றி ஊரில் சிலர் கூடிப்பேசும் பழிச்சொற்கள்
அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல்,
அலர் என்பது சொல் நிகழ்தல்;
அம்பல் என்பது சொல் நிகழ்தல்,
அலர் என்பது இல் அறிதல்;
அம்பல் என்பது இல் அறிதல்,
அலர் என்பது அயல் அறிதல்;
அம்பல் என்பது அயல் அறிதல்,
அலர் என்பது சேரி அறிதல்;
அம்பல் என்பது சேரி அழிதல்
அலர் என்பது ஊர் அறிதல்;
அம்பல் என்பது ஊர் அறிதல்,
அலர் என்பது நாடு அறிதல்;
அம்பல் என்பது நாடு அறிதல்,
அலர் என்பது தேசம் அறிதல்;
(இறையனார்.22. நக்.)
ஒரு வினைத் தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர் நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும், பலர் அறிந்து வெளிப் படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். அம்பல் /அரும்பு; அலர் / விரிந்த மலர். (சொல். கட். 8.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
private gossip about the clandestine love affair between the hero and heroine
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற – அகம் 70/6 அலர் கூறும் வாயினையுடைய பெண்டிர் அம்பலாக்கித் தூற்ற அம்பல் என்பது ஒருசிலர் தமக்குள் மறைவாகப் பேசிக்கொள்வது. இதுவே ஊர்முழுக்கப் பேச்சானால், அது அலர் எனப்படும். பார்க்க – அலர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்