சொல் பொருள்
கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே போடும் வைக்கோல் முதலிய பாரம் அம்பாரம்
சொல் பொருள் விளக்கம்
கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே மேலே போடும் வைக்கோல் முதலிய பாரத்தை அம்பாரம் என்பது முகவை வழக்கு. அம்பரம் என்பது உயரம், வானம், அம்பரம் > அம்பாரம். உழவர் வழிச் சொல் இது. மாட்டுத் தீனியாம் படப்பையின் மேல் முகடு கூட்டுதலை அம்பாரம் என்பதும் வழக்கே. கூரைக்கு மேல் முகடு போடுதலும் அவ்வாறுவழங்கும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்