சொல் பொருள்
(வி) – புலம்பி அழு, அதைப்போன்ற ஒலி எழுப்பு,
சொல் பொருள் விளக்கம்
அரற்று என்பது அழுகை அன்றிப் பலவும் சொல்லித் தன் குறை கூறுதல். அது ‘காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல’ வழக்கினுள்ளோர் கூறுவன. (தொல். பொருள். 260. பேரா.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bewail, sound like wailing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்– புறம் 198/7 களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் – ஐங் 416/3 மகிழ்ச்சியுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய பூம்புதர்களினிடையே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்