சொல் பொருள்
அரவணைத்தல் – அன்பு சொரிதல்
முதலாவது ஒருவரை ஒருவர் உடலால் கட்டித் தழுவுவதையும் பின்னர் உள்ளத்தால் ஒன்றித் தழுவுவதையும் அன்பாகப் பேணிக் காத்தலையும் குறிக்க அரவணைத்தல் என்னும் வழக்கு எழுந்தது.
சொல் பொருள் விளக்கம்
அரவு – பாம்பு, பாம்புகள் பிணைந்து பின்னிக்கிடத்தல் அரவணைப்பு ஆகும். ஆனால், அப்பாம்பைப் குறியாமல் தாயும் சேயும், அன்பும் நண்பும் கொண்டாடுதல், போற்றுதல், அன்பு செலுத்துதல் அரவணைப்பு என வழங்கப்படும் வழக்கம் உண்டு. வேறுபாடற அப்பாம்புகள் பின்னிக்கிடக்கும் நிலையில் உளமொத்து அன்பு பாராட்டலே அரவணைப்பென உவமை வழக்காக வழங்குகின்றதாம். ‘மாசுணப் புணர்ச்சி’ என்பது சிந்தாமணி. மாசுணம் என்பது பாம்பு.
பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தழுவும் தொழிலில் சிறந்தவை. இதனால் முதலாவது ஒருவரை ஒருவர் உடலால் கட்டித் தழுவுவதையும் பின்னர் உள்ளத்தால் ஒன்றித் தழுவுவதையும் அன்பாகப் பேணிக் காத்தலையும் குறிக்க அரவணைத்தல் என்னும் வழக்கு எழுந்தது. அரவு – பாம்பு, அணைத்தல், தழுவுதல். ‘மாசுண மகிழ்ச்சி’ என்றார் திருத்தக்க தேவரும். (மாசுணம் – பாம்பு) (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள். 6)
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்