சொல் பொருள்
அரித்தெடுத்தல் – முயன்று வாங்குதல்
சொல் பொருள் விளக்கம்
அரிப்பெடுத்தல் வேறு; அரித்தெடுத்தல் வேறு. பொற்கொல்லர் பணிக்குப் பயன்படுத்திய கரித்துகளைக் கூடைக் கணக்கில் விலைக்கு விற்பது வழக்கம். அதனை வாங்கியவர்கள் கரியைச் சல்லடையில் போட்டு அலசி எடுத்து தூளை நீரில் இட்டுக் கரைத்துப் பொற்றுகள் இருப்பின் எடுப்பது வழக்கம். அரும்பாடுபட்டுச் சலிப்பில்லாமல் அரித்தால் வீண் போகாது. அதுபோல் பலகால் விடாது கேட்டுக் கேட்டு வேண்டியதைப் பெற்றுக் கொள்வார் உளர். அவர் செயலை அரித்தெடுத்தல் என்பது வழக்காயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்