சொல் பொருள்
(வி) 1. குறை, 2. அரிதாகு,
2. (பெ) 1. அண்மை, சமீபம், 2. நுனி, ஓரம்,
சொல் பொருள் விளக்கம்
சிறு
ஒடுங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
diminish, be reduced, be of uncommon occurrence, nearness, edge, border
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருகு அன்ன அருகா நோக்கமோடு – பொரு 77 (என்னைக்)கண்ணால் விழுங்குவது போன்ற குறையாத பார்வையால் அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் – சிறு 187 சான்றோர் அரிதாகிப்போகாத, அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும் விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 220-222 விழுந்தவரைக் கொல்லும் ஆழமான பொய்கையின் அருகே, வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி (ஊன்றிய)காலின் உறுதியைக் குலைக்கும் (=வழுக்கும்) வழுக்குநிலங்களும் உள்ளன, பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117 போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டு ஓரங்களையும் சீவி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்