சொல் பொருள்
அரைகுலைதல் – இடுப்பில் உடுத்திய உடை நிலை கெடுதல்
தலைகுலைதல் – முடித்த குடுமியும் கூந்தலும் நிலை கெடுதல்.
சொல் பொருள் விளக்கம்
விரைந்து ஓடி வருவார் நிலை ‘ அரை குலையத் தலை குலையக்’ காட்சி யளிப்பதுண்டு. போரில் பின்னிட்டு வருவார், அஞ்சி அலறியடித்து வருவார் நிலையும் இத்தகையவே. “அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து” என்று ஈடு சொல்லும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்