சொல் பொருள்
(பெ)1.நள்ளிரவு, 2. நண்பகல்,
சொல் பொருள் விளக்கம்
1.நள்ளிரவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
midnight, noon
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரைநாள் யாமத்து விழு மழை கரந்து – அகம் 198/4 நள்ளிரவின் யாமத்தில் மிக்க மழையில் மறைந்து மாதிரம் விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 72-75 திசைகளில் விரிந்த கதிர்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிற்றின் மண்டிலம் இருகோல்கள் குறிக்கும் நிலைகள் மாறாமல், மேற்கில் செல்வதற்காக ஒரு பக்கமும் சாராமல் நிற்கும் உச்சிப்பொழுதான நண்பகல் வேளையில் தென்வடலாக நிற்கும் இரு கோல்களின் நிழல்கள் உச்சிப்பொழுதில் ஒன்றோடொன்று சேர்ந்து விழுந்து, ஒரே நேர்கோடாகத் தெரிவதுவே ஒரு திறம் சாரா, இருகோல் குறிநிலை எனப்படுகிறது. ஏனைய நேரங்களில் அவை இரு கோடுகளாகத் தெரியும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்