சொல் பொருள்
அறுவடை – வருவாய்
சொல் பொருள் விளக்கம்
அறுவடை வேளாண் தொழிலில் இடம் பெறும் சொல். அறுவடை நாள் உழவர்களுக்கும், உழவுத் தொழிலில் ஈடுபட்டார்க்கும் இனிய நாள்கள். கடுமையான உழைப்பு நாள் அஃதெனினும். அவ்வறுவடைக்காலமே எதிர் நோக்கியிருக்கும் இன்பநாளாம். அவ்வறுவடைக்கால வருவாயைக் கொண்டது தானே அவர்கள் வாழ்வு. வணிகர்கள் அலுவலர்கள் முதலிய பிறர்க்கும் பெரு வருவாய் ஏற்படும் வாய்ப்பு உண்டானால் ‘நல்ல அறுவடை, என்னும் வழக்கு உண்டாயிற்று. இங்கே அறுத்து மணி குவிக்கும் செயல் இல்லையாயினும், வருவாய் கருதி இவ்வாட்சி ஏற்பட்டதாம். மேலும் நேர்வழியல்லா வழியில் வரும் வருவாய்க்கும் ‘அறுவடை’ என்பது இந்நாள் வழக்கிலுள்ளதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்