Skip to content

அற்றதுஅலைந்தது

சொல் பொருள்

அற்றது – எவர் துணையும் அற்றவர்.
அலைந்தது – ஓரிடம் நிலைப்பற்றது அலைந்து திரிபவர்.

சொல் பொருள் விளக்கம்

“அற்றது அலைந்ததுக் கெல்லாம் இந்த வீடு தானா கிடைத்தது” எனச் சலித்துக் கொள்ளுவார் உளர். அவர் ‘அற்றவர் அலைந்தவர்’ என்று கூறுவதையும் விரும்பாராய் அஃறிணையால் குறிப்பர். தம் வறுமையாலும் செய்து செய்து சலித்தலாலும், மனமின்மையாலும் வரும் பழிப்புரை ஈதாம். அற்றார்க்கு ஒன்று ஆற்றுதலும், புகலற்று அலைவார்க்கு உதவுதலும் அறம் என்பது அறநூற் கொள்கை.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *