Skip to content

சொல் பொருள்

(வி) 1. துன்பப்படு, 2. வறுமைப்படு,

சொல் பொருள் விளக்கம்

1. துன்பப்படு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suffer, be afflicted

be in want

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/9,10

திசையெல்லாம் தன் காதலனைத் தேடி மதிமயங்கி வாடிய
அவன் மனையாளாகிய ஆதிமந்திக்கு

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6

இல்லறம் ஆற்றுதல் என்பது வறுமைப்பட்டவர்க்கு உதவுதல் அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 271

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *