Skip to content

சொல் பொருள்

அலைபாய்தல் – தொடர் தொடராக நினைவு வருதல்.

சொல் பொருள் விளக்கம்

அலை வரிசை வரிசையாக வருவதுபோலப் பலப்பல எண்ணங்கள் தொடர்தல் அலைபாய்தலாம். அலைபாயும் எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதிமுட்டி அலைக்கழிவு செய்யும். இவ்வெண்ணங்கள் இன்பமூட்டுவனவும் நலம் செய்வனவுமாம் எண்ணங்கள் அல்ல என்பதும் துன்பமூட்டுவனவும் தீமை செய்வனவுமாம் எண்ணங்கள் என்பதும் அறியத்தக்கன வாம். “எனக்குள் அலைபாய்கின்றது; என்ன செய்வதென்றே தெரியாமல் தப்பிக்கிறேன்” என்பவர் உரையில் அலைபாய்தல் பொருளும் விளைவும் புலனாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *