சொல் பொருள்
(வி) 1. தங்கு, 2. சுருங்கு, குறைவாகு
2 (பெ.அ) மிகுந்த
3. (பெ) இரவு
சொல் பொருள் விளக்கம்
1. தங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் – நற் 137/8 அரிய பாலை நிலத்தில் செல்வோருக்குத் தங்குவதற்கான நிழலாகும் ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் – நற் 131/1 விளையாடிய விளையாட்டுக்களையும், தங்கிய சோலைகளையும் அல்குறு வரி நிழல் அசைஇ – அகம் 121/9 சுருங்கிய வரிவரியாக உள்ள நிழலில் இளைப்பாறி அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1 மிக்க துன்பம் உழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் அல்குறு பொழுதில் தாது முகை தயங்க – குறு 273/1 இரவாகும் வேளையில் தாதையுடைய முகைகள் மலர்ந்து திகழும்படி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்