சொல் பொருள்
அல்லு – அல்லலைத் தரும் பெருங்கடன்.
சில்லு – சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன்.
சொல் பொருள் விளக்கம்
“அல்லுச் சில்லு இல்லாமல் கணக்கைத் தீர்த்துவிட்டேன்” என்று மகிழ்வுடன் கூறுபவர் உரையைக் கேட்கும்போது அவர்கள் அல்லுச்சில்லால் பட்ட துயரம் தெரியவரும். சில்லு என்பது சிறியது; சில்லி, சில்லுக் கருப்புக்கட்டி, தேங்காய்ச் சில்லு என்பவனற்றால் சில்லுக்குச் சிறுமைப் பொருள் உண்மை அறியலாம். இனி, அல்லு அல்லலையும் சில்லு சிறுமையையும் தருவதாகவும் அமைகிறது. அவனுக்கு அல்லுச் சில்லு எதுவும் இல்லை; அமைதியான வாழ்வு என்னும் பாராட்டால் இது விளங்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்