சொல் பொருள்
(பெ) சேறு, சேற்றுக்குழம்பு
சொல் பொருள் விளக்கம்
அள்ளல் : அள்ளும் தன்மையதாகிய சேற்றின் குழம்பு. (நற்றிணை. 199. அ. நாராயண.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mud, mire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/2 சேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை ஈர்ந்தண் எருமை சுவல் படு முதுபோத்து தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி – அகம் 316/3,4 மிக்க குளிர்ச்சியுற்ற முதுகினையுடைய முதிய எருமைக்கிடா மிக்க சேற்றின் குழம்பிலே கிடந்து இரவெல்லாம் துயின்று ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து உளெனே வாழி தோழி வளை நீர்க் கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி வளி பொரக் கற்றை தாஅய் நளி சுடர் நீல் நிற விசும்பின் மீனொடு புரைய பைபய இமைக்கும் துறைவன் மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே - நற்றிணை. 199.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்