சொல் பொருள்
அழுதல் – கண்ணீர் விட்டு கலங்குதல்
அரற்றுதல் – வாய் விட்டுப் புலம்புதல்.
சொல் பொருள் விளக்கம்
அழுது வடிதல், அழுது வழிதல் என்பவை வழக்கு. அழுகைக் கண்ணீர் என்பார் அருஞ்சொல் உரையாசிரியர் (சிலப்.5.237-9)
“அல்லல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத்
தேய்க்கும் படை” என்பது திருக்குறள்.
அரற்றுதல், என்பதற்கு அலறுதல், புலம்பல், ஒலித்தல், ஓலமிடல், பலவும் சொல்லித் தன்குறை கூறல் என்னும் பொருள்கள் உண்டு. “காதல் கைம்மிகக் கனவின் அரற்றலைச்” சுட்டுவார் தொல்காப்பியர். அரற்று என்பதற்கு ‘வாய்ச் சோர்வு’ என்பார் இளம்பூரணர் (பொருள்.256). இக்காலத்தில் வாய்வெருவல், வாய்விடல் என அரற்று வழங்குகின்றது.
“அழுது வாய் குழறி” என அழுது அரற்று தலைச் சுட்டுவார் கம்பர். (ஆர.41).
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்