சொல் பொருள்
ஆடை – கார் காலம்
சொல் பொருள் விளக்கம்
உடை, பாலாடை, பன்னாடை என்பவற்றைக் குறியாமல் ஆடை கோடை எனக்காலப் பெயர் குறிப்பதாக மக்கள் வழக்கில் உள்ளது. இவ்விணைச் சொல்லில் வரும் ஆடை, ‘கார் காலம், என்னும் பொருளில் வழங்குகின்றது. நீலவான் ஆடை என்னும் பாவேந்தர் பாடலடி நினைவில் எழச் செய்யும் வழக்கு இது. கார்காலம் தொட்டு அடுத்த கார்காலத் தொடக்கம் வரை ஆட்டை (ஆண்டு) என வருவதும் விளையாட்டில் ஓர் ஆட்டை
முடிந்தது என்பதும் எண்ணலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்