சொல் பொருள்
ஆடை – மழை பெய்தற்குரிய கார் காலம் ஆடை
கோடை – வெயில் அடித்தற்குரிய கோடை காலம் கோடை
சொல் பொருள் விளக்கம்
‘காலம்’ என்றாலே கார்காலம் அல்லது மழைக் காலத்தையே குறிக்கும். காலச் சோளம், காலப்பருத்தி, காலம் விளைந்தது என்பவை வழக்குகள் கோடை என்பது மேல்காற்று வீசும் வறண்ட காலம். அந்நாளில் விளைவன கோடைச் சோளம், கோடைச் சம்பாநெல் எனப்படும். ‘கோடை’ ஆகு பெயராக இலக்கண நூல்களில் காணப்படும்.
குளிரால் ஆட வைக்கும் காலம் ‘ஆடை’ எனவும், கொடு வெப்பக் காலம் ‘கோடை’ எனவும் வந்திருக்கலாம், “ஆனி, ஆடி மாதக் கொந்தலிலே குளிர் ஆடுகள் போல் கொடுகி நிற்போம்” என்பது கவிமணி பாடல்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்