சொல் பொருள்
ஆண்டுமாறி – வாழ்ந்து கெட்டவன், வாழ ஒட்டாதவன்
சொல் பொருள் விளக்கம்
ஆண்டு என்பது ஆட்சி செய்து என்னும் பொருளது. மாறி என்பது அவ்வாட்சி நிலை மாறியது என்னும் பொருளது. சிலரை வசை கூறு முகத்தான் இவ்வழக்கு உள்ளது. “ஆண்டு மாறி நீ தொட்டது எது விளங்கும்” என்பர். “ஆண்டுமாறி நீ பார்த்தாலே பச்சைமரமும் பட்டுப்போகுமே” என்பது இன்னும் உச்சப்பழமொழி. வாழ்ந்து கெட்டவன் என்பதால் எந்த ஒன்றையும் வாழ விடமாட்டான் என்னும் பொருள் தருவதாக வழக்கில் அமைந்துள்ளது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்