சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. குதிரையின் நேர் ஓட்டம், 2. தொடக்கம், மூலம், முதல் 3. சங்ககால அருமன் என்பனின் தந்தை, 4. மல்லிநாட்டுக் காரி என்பனின் மகன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Running of a horse in a straight course
beginning, source
father of Aruman of sangam period
son of Kari of Malli land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடி படு மண்டிலத்து ஆதி போகிய கொடி படு சுவல இடுமயிர் புரவியும் – மது 390,391 தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும் – ஆதி – குதிரை ஓட்டங்களில் ஒருவகை ஓட்டம் – அதாவது நேராக ஓடல் என்ப – பொ.வே.சோ விளக்கம் ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ – பரி 5/22 பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த, – ஆதி அந்தணன் – பிரமன். அந்தணர் மரபுக்கு இவனே ஆதீயாதலின் இவ்வாறு பெயர் பெற்றான் – புலி.கேசிகன் வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/36,37 இந்த ஆதி என்பவன் அருமன் என்பவனின் தந்தை. அருமனின் ஊர் மூதூர் என்கிறது இப் பாடல். இந்த அருமன் நற்றிணை 367-இல் குறிக்கப்பெறும் மூதில் அருமன் என்பர். பார்க்க : . அருமன் ஆதி அருமன் மூதூர் அன்ன – குறு 293/4 ஆதி அருமன் என்பானின் மூதூர் போல, மல்லிகிழான் காரிஆதி என்பவனைப்பற்றி ஆவூர் மூலங்கிழார் புறம் 177-இல் பாடியுள்ளார். காரி என்பவன் ஆதியின் தந்தையாதல் வேண்டும். இவன் ஒரு வள்ளல். பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12 பெரிய பெயரை உடையனாகிய ஆதியினது பிணங்கிய அரில்பட்ட காட்டையுடைய குடநாட்டின்கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்