சொல் பொருள்
(பெ.அ) 1. எல்லைகடந்த, அடங்காத, 2. நீங்காத, 3. அழிக்கமுடியாத, , 4. எண்ணிலடங்காத
சொல் பொருள் விளக்கம்
1. எல்லைகடந்த, அடங்காத
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
boundless, unceasing, imperishable, innumerable
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – சிறு 245 எல்லையற்ற விருப்பத்தைனால் தானே முன்னின்று உண்ணச்செய்து அழித்து ஆனா கொழும் திற்றி – மது 211 செலவழித்தும் நீங்காத கொழுத்த தசைகள் ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1 அழிக்கமுடியாத நோயுடன் துன்பம் மிகுதியால் கலக்கமெய்தி ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5 கொடுப்பதில் எண்ணிலடங்காத ஒளிறும் தொடி அணிந்த கைகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்