Skip to content

சொல் பொருள்

(ஒ.வி.மு) மேற்கொள்ளுதலைக் குறிக்கும் சொல்,

சொல் பொருள் விளக்கம்

மேற்கொள்ளுதலைக் குறிக்கும் சொல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

assume, adopt, embrace

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எமியேம் துணிந்த ஏமஞ்சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 32-34

நாங்களாக துணிந்து செய்த பாதுகாப்பான இந்த அரிய செயலை
அது நிகழ்ந்த வண்னம் நீ நன்கு உணரும்படி
கூறுவதை மேற்கொண்டேன், கோபப்படாதே

கான்கெழு நாடன் மகளே
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே – ஐங் 430/3,4

காடு பொருந்திய நாட்டையுடையோனின் மகளே
அழுகையை மேற்கொண்டாய் (ஆதலால்) தவிர்த்தேன் பயணத்தை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *