சொல் பொருள்
(வி.அ) 1. நிறைந்து, 2. விரிந்து 3. நீங்கி, அகன்று என்ற சொல் மருவி ஆன்று என்று ஆனது என்பர்.
சொல் பொருள் விளக்கம்
1. நிறைந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
having been full, having stretched our, having ceased
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே – புறம் 191/6,7 நற்குணங்களால் நிறைந்த, புலன் அடக்கம் உள்ள, பணிவும் உள்ள கோட்பாட்டினையுடைய சான்றோர் பலர் நான் இருக்கின்ற ஊரில் இருக்கின்றனர். அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்சோறும் – புறம் 113/2 சமைத்து அதனை நீடித்தும் அழிக்கமுடியாத கொழுத்த துவையையும் ஊனுடைய சோறையும் நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1 நிழல் நீங்கி அற்றுப்போன நீர் அற்ற அரிய வழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்