சொல் பொருள்
(பெ) 1. காளான், 2. நீர் இறைக்கும் சால், பன்றிப்பத்தர்
சொல் பொருள் விளக்கம்
1. காளான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
common mushroom
irrigation bucket
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் – பெரும் 157 குடைக்காளானின் வெண்மையான முகைகளைப் போன்று குவிந்த மொட்டுகளையுடைய நீர்த்தெவ்வும் நிரைத் தொழுவர் பாடு சிலம்பும் இசை ஏற்றத் தோடுவழங்கும் அகல் ஆம்பியின் கயன் அகைய வயல் நிறைக்கும் – மது 89-92 நீரினை முகக்கின்ற வரிசையான தொழிலாளிகள் பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்தோடு இயங்கும் அகன்ற பன்றிப்பத்தரின் ஓசையும் குளம் குறைந்துபோகுமாறு வயலை நிறைக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்