சொல் பொருள்
நுணுகுதல்
வேண்டாததைத் தள்ளுதல் ஆய்தல் எனப்படும். மேலிட்டுத் தோன்றல் என்னும் சிறப்பை விளக்குவது இது.
சொல் பொருள் விளக்கம்
கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்பன பொது வழக்கு. கொள்ளத் தக்கதைக் கொண்டு, கொள்ள வேண்டாததைத் தள்ளுதல் ஆய்தல் எனப்படும். ஆய்தல், ஆராய்தல் என்பவற்றின் அடிமூலமும் பொருளுமாக விளங்குவது இச்சொல்லாட்சியாம். தொல்காப்பியர்க்கு முன்னைத் தொல் வழக்குச் சொல் இது. மீன் ‘ஆய்கிறது’ என்பது, மேலே மிதக்கிறது என்னும் பொருளுடையது. தட்டான் ஆய்கிறது என்பதும் அது. மேலே பறக்கிறது என்பது பொருளாம். ஆய்தல் மேலிட்டுத் தோன்றல் என்னும் சிறப்பை விளக்குவது இது.
நுணுகுதல். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சா அய் ஆவயி னான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்றார் தொல்காப்பியனாரும். (சிவஞான பாடியம். 7:3)
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்