ஆலங்கானம் என்பது தலையாலங்கானம் என்றும் அழைக்கப்படும் ஓர் ஊர்.
1. சொல் பொருள்
(பெ) தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஊர்
2. சொல் பொருள் விளக்கம்
தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஊர்
இவ்வூர் தலையாலங்கானம் என்றும் அழைக்கப்படும். நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன்
சேர, சோழ மன்னர்களையும், அவருடன் வந்த மற்ற ஐந்து சிற்றரசர்களையும் சேர்த்து எழுவரை
இந்த இடத்தில் நடந்த போரில் வென்றான். அதனால அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன் என்று அழைக்கப்படுகிறான்.
இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
An ancient city in Tamilnadu
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எழு உறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன் நேர எழுவர் அடைப்படக் கடந்த ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/4-6 கணையமரத்தை ஒக்கும் திண்ணிய தோளினையும், நன்கு இயன்ற தேரினையுமுடைய செழியன் பகைத்த எழுவரையும் முற்ற வென்ற தலையாலங்கானத்து எழுந்த வெற்றியாரவாரத்திலும் பெரிது என்று கூறி ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து - மது 127 ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த - நற் 387/7 ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப - அகம் 36/14 ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த - அகம் 175/11 ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என - அகம் 209/6 ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட - புறம் 23/16 ஆலங்கானத்து அணியொடு பொலிந்த - இலாவாண:11/57 ஆலங்கானத்து ஆற்று அயல் மருங்கின் - நரவாண:3/65
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்