Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஒலி, 2. களிகூர், 3. ஆடு

சொல் பொருள் விளக்கம்

1. ஒலி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

make sound, rejoice, dance

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/10

மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில்கள் கூவிவிளையாடும்

வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும் – ஐங் 85/2

வெள்ளை நெற்றியையுடைய சம்பங்கோழியின் அரித்தெழும் ஓசையையுடைய பெட்டைக்கோழி
குளிர்ந்த நறிய பொய்கையில் தனது இனத்தோடு மகிழ்ந்து ஆரவாரிக்கும்

மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495

மயில்கள் ஆடும் மரங்கள் நிறைந்த குறுங்காட்டில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *