சொல் பொருள்
ஆள் – நிமிர்ந்த அல்லது முழுத்த ஆள்
பேர் – ஆள் என்று பெயர் சொல்லத் தக்க சிறார் அல்லது இளைஞர்.
சொல் பொருள் விளக்கம்
பெரிய தூணையோ தடியையோ தூக்க வேண்டிய போது பெரிய ஆள்களின் எண்ணிக்கை குறைந்திருக்குமானால் சிறுவர்களையும் சேர்ந்து பிடிக்குமாறு கூறுவர். அந்நிலையில் ‘ஆளும் பேருமாகப் பிடியுங்கள்’ என்பர்.
ஒத்த ஆட்டக்காரர்களைப் பிரித்து ஆடும் ஆட்டத்திற்கு ஒருவர் இருவர் குறைவரானால், ‘ஒப்புக்குச் சப்பாணி’ என இணையாக அமர்த்திக்கொண்டு ஆடும் வழக்கத்தை-இதனுடன் ஒப்பிட்டுக் காணலாம். ‘உப்புக்குச் சப்பாணி’ என வழங்குகின்றது.
ஆள், பேர், புள்ளி, தலை என்பவை பொதுவில் ஆள்களைக் குறிக்குமாயினும் இவண் பொது நீங்கி,பேர் என்பது பேருக்கு
ஆளாக இருக்கும் சிறாரைக் குறித்ததாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்