சொல் பொருள்
(வி) 1. கவனக்குறைவுடன் இரு, 2. ஏளனம்செய், அவமதி
2. (பெ) பழி, நிந்தனை
சொல் பொருள் விளக்கம்
கவனக்குறைவுடன் இரு, ஏளனம்செய், அவமதி, பழி, நிந்தனை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be careless or negligent, insult, slight, vilification, despise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி இரவின் வரூஉம் அதனினும் கொடிதே – நற் 98/8-10 எமது தந்தை பேணும் காவலுடைய அகன்ற மாளிகையின் தூங்காமல் காவல்காக்கும் காவலர் சோர்ந்துபோகும் வேளை நோக்கி இரவில் வந்து என்னைச் சந்தித்துச் செல்வதைக் காட்டிலும் கொடுமையானவை திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின் புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – கலி 135/12-14 ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை மலர்கள் ஏளனம் செய்யும் கண்ணையுடையவளாக மாற்றிவிட்டு அவளைக் துறப்பாயேல், அது உன் புகழுக்கு நேர்ந்த பெரிய கரும் புள்ளியாய் ஆகிவிடாதா? யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற – புறம் 40/6,9 யாங்கள், உன்னைப் பழி சொல்வோர் கழுத்து வணங்க புகழை உரைப்போர் பொலிவு தோன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்