சொல் பொருள்
இசகு (இசைவு) – ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்.
பிசகு (தவறு) – தன் அறியாத் தன்மையாகிய தவற்றால் ஏமாறுதல்.
சொல் பொருள் விளக்கம்
எந்த ஒரு குற்றத்திலாவது வன்பு துன்புகளிலாவது மாட்டிக் கொண்டவர், ‘இசகுபிசகாக மாட்டிக்கொண்டேன்’ என்பது வழக்கு. வெள்ளறிவுடையான் பிறர் ஏமாற்றுக்கு ஆட்பட்ட போது அவனைப் பிறர் இசகு பிசகாக ஏமாறிப் போனான் என்பதும் வழக்கு.
ஒருவரைத் தம்பால் வயப்படுத்தி அவரிடம் உள்ளவற்றைத் தட்டிப் பறித்தற்குத் தணியா ஆர்வமுடையவர் என்றும் உண்டன்றோ? அவர்க்கு வயப்பட்டு உள்ளதை உரியதை இழந்து ஓலமிடுவாரும் என்றும் உண்டன்றோ! இவர்கள் வழியாக வழங்கப் பெறும் இணைச் சொல் இது
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்