சொல் பொருள்
(பெ) – பிறரால் வரும் துன்பம்
சொல் பொருள் விளக்கம்
இடுக்கண் என்பது மலர்ந்த நோக்கம் இன்றி, மையல் நோக்கம் படவரும் இரக்கம். (தொல். பொருள். 260. பேரா.)
இடுக்கண் = இடுங்குகண்; விகாரம். மலர்ந்த முகம் ஒழிந்து கண் இடுங்கும்படி உறுவது எனத் துன்பத்துக்குக்
காரணக்குறி.
“இடுக்கண் களைவதாம் நட்பு” திருக்குறள் (செந்தமிழ்ச் செல்வி. 2: 79.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
misery from others
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் – மலை 18 வருத்துதலைச் செய்யாமல் வழிச்செல்வோரைப் போக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்