சொல் பொருள்
(பெ) கொத்து, குலை,மஞ்சரி,பல பூக்கள் ஒரே காம்பில் சேர்ந்திருக்கும் தொகுதி
சொல் பொருள் விளக்கம்
இணர் என்பது பல பூக்கள் ஒரே காம்பில் சேர்ந்திருக்கும் தொகுதியை (மஞ்சரியைக்) குறிக்கும். (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 102)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bunch of flowers or fruits
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீடு இணர்க் கொன்றை கவின் பெற காடு – அகம் 364/5 நீண்ட கொத்துக்களைக் கொண்ட கொன்றையால் காடு அழகுபெற இன மாவின் இணர்ப் பெண்ணை – பட் 18 இனமான மாமரங்களினையும், குலைகளையுடைய பனைகளையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்