சொல் பொருள்
மரத்தில் அல்லது செடி கொடியில் இருந்து ஓர் இலையைப் பறிப்பதை இணுங்குதல் என்பதும் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
காதை அறுத்து விடுவேன் என்பதை, ‘காதை இணுங்கி விடுவேன்’ என வைவது தென்னக வழக்கு. மரத்தில் அல்லது செடி கொடியில் இருந்து ஓர் இலையைப் பறிப்பதை இணுங்குதல் என்பதும் வழக்கு. இலையை இணுக்கு என்பதும் உண்டு. பறிக்கப்பட்டது என்னும் பொருளது. துணிக்கப்பட்டது துண்டிக்கப்பட்டது துணுக்கு ஆவது போல. இணுங்கப்பட்டது இணுக்கு ஆயது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்