Skip to content

சொல் பொருள்

(வி) 1. மாறிமாறி ஒலி, 2. இரண்டிரண்டாக ஒலி

சொல் பொருள் விளக்கம்

1. மாறிமாறி ஒலி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sound alternately

sound double

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
————— ———- —————- ————–
கால் கிளர்ந்தன்ன வேழம் – திரு 80-82

தாழ்கின்ற மணி மாறி ஒலிக்கின்ற பக்கத்தினையும்
————- ———– ——— ———
காற்று எழுந்ததைப் போன்ற களிறு

விரல் ஊன்று படுகண் ஆகுளி கடுப்பக்
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 140,141

விரல்கள் ஊன்றிப் பதியும் முழங்கும் கண்ணையுடைய உடுக்கினைப் போல
பேராந்தை இரண்டிரண்டாய் ஒலி எழுப்பும் நீண்ட மலையின் சரிவினில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *