சொல் பொருள்
(பெ) இலந்தை,
சொல் பொருள் விளக்கம்
இலந்தை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Jujube-tree. m. tr., Zizyphus jujuba
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலந்தை மரத்தின் அடிமரம் பொலிவிழந்து இருக்கும். இதன் காய் உருண்டு திரண்டு இருக்கும். புல் அரை இரத்தி பொதி புற பசும் காய் – நற் 113/2 புன்மையான அடிப்பகுதியையுடைய இலந்தை மரத்தின் பொதிந்த மேற்பகுதியையுடைய பசிய காய்கள் இந்த மரம் உயரமாக வளரும், ஊர்ப்பொதுவிடங்களில் வளரும். இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/12 இலந்தை மரம் ஓங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண் – பொதி – அம்பலம் இந்த மரத்தின் உச்சிப்பாகம் பரட்டையாக – காய்ந்துபோய் – இருக்கும். அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் – புறம் 325/11,12 உலர்ந்த தலையையுடைய இரத்திமரத்தின் அசைகின்ற நிழலில் மெல்லிய தலையையுடைய சிறுவர்கள் அம்பெய்து விளையாட்டயரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்