சொல் பொருள்
கொடுப்பார் போலிருந்து பின்பு அவர் இல்லை என்றுவிட மனந்தடுமாறிச் செயலற்றுப்போம் போக்கையும் கண்டு அவ்விரப்பினை அஞ்சுதலாம்.
சொல் பொருள் விளக்கம்
அஃதாவது ஒருவர் வறுமையுற்ற காலத்து அவ்வறுமைதானே அவரைத் தள்ளிக்கொண்டு போய் இரப்பிக்கும்பொழுது, தமது ஒளி அடங்கிப் பொலிவழிந்து, கடுகவுரை கூடாது நின்று, தம் வறுமையை ஒருவற்குப் பல காலும் மதுரமாகச் சொல்லில் அது அவர் செவியில் ஏறாது சொல்லிய வரை எளியராக நினைந்து, கடைக்கணித்துப் பார்க்கும் பார்வையையும், கொடுப்பார் போலிருந்து பின்பு அவர் இல்லை என்றுவிட மனந்தடுமாறிச் செயலற்றுப்போம் போக்கையும் கண்டு அவ்விரப்பினை அஞ்சுதலாம். (நாலடி இரவச்சம். தருமர்.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்