சொல் பொருள்
(பெ) இரப்புரை, இரப்பு மொழி,
சொல் பொருள் விளக்கம்
இரப்புரை, இரப்பு மொழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pleading
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என என் வரவு அறீஇ – புறம் 398/12-16 முழுமதி போன்ற வடிவினதாகிய அரித்த ஓசையையுடைய என் தடாரிப்பறையை தனது இரப்புரை புலப்படுமாறு அதன் நெடிய வார்கள் அரித்த குரல் எடுத்தியம்ப இசைத்து நின்னை நினைந்துவரும்பரிசிலருடைய கொள்கலம் நிரம்ப அரிய பொருள்களை வழங்குபவனே எம்மிடத்து நீங்காத அன்புற்ர நிலையையுடையனாகுக என்று நிற்கும் என் வரவை அறிந்து – தடாரியின் ஓசை, அதனை இயக்கும் பொருநரது குறிப்பை உணர்த்தும்வகையில் எழுப்பப்படுமாகலின் இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து என்றார். – ஔவை.சு.து.உரை,விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்