சொல் பொருள்
(பெ) அலறியடித்துக்கொண்டு விரையும் ஓட்டம்
சொல் பொருள் விளக்கம்
அலறியடித்துக்கொண்டு விரையும் ஓட்டம்
ஒரு மரத்தின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் பறவைகள், திடீரென்று மிக அருகில்
ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டால், எவ்வாறு பதறியடித்துக்கொண்டு பறந்தோடுமோ
அதுவே இரியல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bursting out
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை அரி புகு பொழுதின் இரியல்போகி ————— ———— ———— ————— கறையணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 201-204 உழுது விதைத்த பின்னர் களையெடுத்துவிட்ட தோட்டத்தை அறுவடைக்காக நுழையும்போது, (அது வரை அங்கு வாழ்ந்துகொண்டிருந்த காடைகள்) பயந்து ஓடி தங்குமிடத்தில் சேரும். மருட்சி, வெருட்சி, பதற்றம், கலக்கம், விரைவு – எல்லாம் கலந்த ஒரு ஓட்டமே இரியல். ஒரு கோழியின் இரியல் இங்கு காட்டப்பட்டுள்ளது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்