Skip to content

சொல் பொருள்

(பெ) இறால்மீன்

சொல் பொருள் விளக்கம்

இறால்மீன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Prawn, shrimp, macroura;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இறவு அருந்திய இன நாரை – பொரு 204

இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் – நற் 19/1

(இறால் மீனின் முதுகினைப் போன்ற சொரசொரப்பான பெரிய அடிப்பகுதி(யை உடைய தாழை))

துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2

(மெல்லிய பஞ்சுப்பிசிர் போன்ற தலையையுடைய இறால் மீன்களோடு திரளான மீன்களைப் பெறுவீர்)

முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/17

(வளைந்த முதுகினையுடைய இறால் மீனுடன் பல மீன்களைக் குவிக்கும்)

முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1

(முள்ளைப் போன்ற கால்களையுடைய இறால்மீனின் வளைந்த முதுகையுடைய பெரிய கூட்டம்)

இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/2

(இறால்மீனைப் போன்று வளைந்த வாயை உடைய பேடையுடன்)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *