சொல் பொருள்
(வி) 1. முறி, ஒடி, 2. வரி, கப்பம் முதலியன செலுத்து, 3. தங்கு, 4. சடங்குகளைச் செய், 5. அம்பு முதலியன தை
சொல் பொருள் விளக்கம்
1. முறி, ஒடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
snap, break, pay as tax, debt., stay, observe (religious) rites, pierce through, gore
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடக்கிளி எடுத்தல் செல்லா தடக்குரல் குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி – அகம் 38/12,13 (இளமையான கிளிகள் தூக்கிச் செல்லமுடியாத அளவுக்குப் பெரிய கதிராகிய வளைந்த பாரத்தை முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள் பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறன் இல் வேந்தன் ஆளும் – அகம் 109/13,14 (பெரிய களிற்றின் கொம்போடு புலியின் வரிவரியான தோலை இறையாகச் செலுத்தச்செய்யும் அறனில்லாத அரசன் ஆளுகின்ற) கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும் – அகம் 397/13 (கரிய அடிப்பகுதியை உடைய யா மரத்தில் பருந்து வந்து தங்கும்) அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் – புறம் 2/22 (மாலைப் பொழுதில் அந்தணர்கள் தம் மாலை சடங்குகளைச் செய்யும்) அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை – புறம் 19/9 (அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடையயானை)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்