சொல் பொருள்
(வி) தங்கு
சொல் பொருள் விளக்கம்
தங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dwell, abide
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/4,5 ஈரினது திரளோடு தங்குதல் மிக்க பேனாகிய பகையை ஒரு பகை என்பேனோ தெறல் மறவர் இறைகூர்தலின் பொறை மலிந்து நிலன் நெளிய – புறம் 345/5,6 பொருதலை இயல்பாகவுடைய மறவர் வந்து தங்குதலால் சுமை மிகுவதால் நிலமும் சுளியும்படியாக முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை புள் இறைகூரும் மெல்லம்புலம்ப – அகம் 10/3,4 கூனல்பட்டு முதிர்ந்த புன்னைமரத்தின் பெரிதாய் நின்ற கரிய கிளைகளில் பறவைகள் மிகத் தங்கியிருக்கும் நெய்தல் நிலத் தலைவனே! இந்த மூன்று எடுத்துக்காட்டுகள் மூலம் கூட்டமாய்த் தங்கியிருத்தலை இறைகூர்தல் என்கிறோம் எனக் கொள்ளலாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்