சொல் பொருள்
(வி) 1. தாழ், கவிழ், 2. கெஞ்சு, மன்றாடு, 3. வளை, 4. வணங்கு,
சொல் பொருள் விளக்கம்
1. தாழ், கவிழ்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hang low, plead, implore, bend low, pay reverence;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நலம் கெழு திரு முகம் இறைஞ்சி – அகம் 299/13 நலம் பொருந்திய அழகிய முகத்தைக் கவிழ்த்து இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/5 இனிதாக அமர்ந்த காதலன் மன்றாடி, தன் அடிகளில் விழுந்து பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெரும் ததரல் – குறு 213/3 பசிநோயைத் தீர்க்கும்பொருட்டு வளைத்த பரிய பெரிய மரப்பட்டையினை இறைஞ்சுக பெரும நின் சென்னி – புறம் 6/19 வணங்குக, அரசனே உன் தலை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்