சொல் பொருள்
(பெ) சிறு துவாரம், துளை (மாதர் முலைக்காம்பில் உள்ளவாறு),
சொல் பொருள் விளக்கம்
மிகச்சிறிய ஓட்டையை ‘இல்லி’ என்பது நெல்லை வழக்கு. ‘இல்லிக்குடம்’ என்பது, நீர் ஒழுக்குடைய குடம் என்று கூறும் நன்னூல். கண்ணுக்கு வெளிப்படலில்லாத் துளையைக் கருதி இவ்வாறு வழங்கப்பட்டிருக்கலாம். “இல்லையோ என்னும் இடை” என்பதை நினைக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Orifice, as of the teat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை – புறம் 164/4 துளை தூர்ந்த பொல்லாத வறிய முலையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்