சொல் பொருள்
இழுப்பு – உயிரைப் போக விடாமல் போராட்டத்துடன் மூச்சை உள்ளே இழுத்தல்.
பறிப்பு – உள்ளே போன மூச்சு தங்க மாட்டாமல் வெளியேறல்.
சொல் பொருள் விளக்கம்
‘உயிர் ஊசலாடுகிறது’ என்னும் உவமைத் தொடர் இழுபறியை விளக்குவதாம்.
ஒரு தொல்லை போய் மறு தொல்லை, அது போய் வேறொரு தொல்லையென வாட்டமுறுவாரை ‘இழுபறி’ என்பதும், ஒத்து வாழ்க்கை நடத்தமாட்டாத கணவன் மனைவியர் வாழ்வை ‘இழுபறிப் பிழைப்பு’ என்பதும் உண்டு. கயிறு இழுவைப் போட்டியில் ‘இழுபறி’ உண்டல்லவோ! அதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். “காடு வாவா என்கிறது; வீடு போ போ என்கிறது” என்னும் பழைய மொழி இழுபறியை நன்கு தெளிவிக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்