சொல் பொருள்
இனிப்புச் சேவை, இழுமிச் சேவு என வழங்குவது நெல்லைப் பகுதி வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
இழுமென் மொழியால் விழுமியது பயிலல் என்பது தொல்காப்பியம். இழும் என்பதற்கு இனிமை என்பது பொருள். இப்பொருளில் இனிப்புச் சேவை, இழுமிச் சேவு என வழங்குவது நெல்லைப் பகுதி வழக்காகும். தமக்கு இன்பம் தரும் மொழியைத் தம் + இமிழ் = தமிழ் என வழங்கியது எண்ணத்தக்கது. இதன் விரிவான விளக்கமாக அமைந்தது ‘தமிழ்’ என்னும் எம் நூலாகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்