இவுளி என்பது குதிரை
1. சொல் பொருள்
(பெ) குதிரை
2. சொல் பொருள் விளக்கம்
குதிரை, பார்க்க குதிரை, புரவி, பரி,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
horse
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி/பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/5,6
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு/கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ – புறம் 197/1,2
(கால்,வளி= காற்று)
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி/திரை தரு புணரியின் கழூஉம் – நற் 63/9,10
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி/கோல் முனை கொடி இனம் விரவா வல்லோடு – பதி 92/4,5
நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ – அகம் 363/1
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி/பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி – புறம் 4/13,14
அலங்கு உளை அணி இவுளி/நலங்கிள்ளி நசை பொருநரேம் – புறம் 382/4,5
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 492
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்