சொல் பொருள்
அளித்தல்,இடுதல்,வழங்கல்
சொல் பொருள் விளக்கம்
(1) அளித்தல் என்பது அன்பினாற் கொடுத்தலையும், இடுதல் என்பத கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க்கீதலையும் ; வழங்கல் என்பது எடுத்துக் கொடுத்தலையும் குறிக்கும். அருள்தல் என்பது அருளிக் கொடுத்தல். (சொல். கட். 56.)
( 2 ) ஈவு (வகுத்து வந்த எண்) ஈ (ஆயிரக் கணக்கில் மொய்க்கும் சிற்றுயிர்) ஈட்டு (சிறுக உழைத்துத் திரட்டு) ஈண்டு (திரள்வுறு) ஈடு (சரிக்குச்சரி) ஆகிய தொடர்புச் சொற்கள் ஈதலின் பொருட்பண்பு சுட்டுகிறது. பலகாலம் பல தடவை சிறுகச் சிறுக உழை த்துத் திரட்டிய பொருளை ஒருவர் பலருக்குப் பலகாலம் பல தடவை தேவை அறிந்தும் தகுதி அறிந்தும் பகிர்ந்து கொடுத்தலையே இச்சொல் குறிக்கிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை. III . 388.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்