உணவு என்பது ஒரு உயிர் பசியாற வழங்கப்படும் பொருள்
1. சொல் பொருள்
(பெ) உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே, ஒரு உயிர் பசியாற வழங்கப்படும் பொருள், சாப்பிடத் தகுந்த ஒரு பொருள், சத்துணவு, துரித உணவு
2. சொல் பொருள் விளக்கம்
உணவு என்பது பொதுப்படையான சொல். உணவு என்பது ஆகாரம். உணவு என்பது உணா என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு உயிரின் பசி பிணியை போக்குவதற்காக வழங்கப்படும் பொருள். உணவு வழக்கமாக தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Food, ingredients for creating complete food/meal(uncooked, vegetables, paddy)
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து – பட் 267
நெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி,
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறிபட மறுகி
நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த – அகம் 377: 1-3
சிறிய புல்லரிசியாகிய உணவினை வரிசையாகச் சென்று
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே – புறம் 18/21
உணவு என்று சொல்லப்படுவது நிலமும் நீரும் ஆகும்,
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் – புறம் 43/3
காற்றே உணவாகக்கொண்டு, அந்தக் கதிரவனுடன் திரிந்து வரும்
முகந்து கொள்ளும் உணவு என்கோ – புறம் 396/20
நாங்கள் முகந்துகொண்ட உணவுப் பொருள்களைச் சொல்லவா!
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/26
உணவு பெறுவது தாமதமாகிவிடும் என்று கடவுளை வேண்டியும் கிணையை இயக்காமல்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
சில்பதஉணவின் கொள்ளை சாற்றி – பெரும் 64
உப்பாகிய உணவின் விலையைக் கூறி,
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 163
மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி,
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்/குமரி_மூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 246,247
தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய,
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
தன் பாடிய தளி உணவின்/புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4
தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20
உணவையே முதலாவதாக உடையது அந்த உணவால் ஆகிய உடம்பு,
அல்லி உணவின் மனைவியொடு இனியே – புறம் 250/5
அல்லி அரிசியை உணவாகக் கொண்ட மனைவியுடன் இப்பொழுது
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் – புறம் 62: 16,17
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது