சொல் பொருள்
உண்ணுதல் – சோறு உட்கொளல்
தின்னுதல் – காய்கறி, சிற்றுணவு (சிறுதீனி) ஆகியவற்றைத் தின்னுதல்.
சொல் பொருள் விளக்கம்
“ உண்ணாமல் தின்னாமல் ஐயோவென்று போவான்” என்பதில் இவ்வினை மொழியாட்சி காண்க.
உண்ணுதல் – பேருணவும்; தின்னுதல் – சிற்றுணவுமாம். தின்னலால் தீனிப்பெயர் பெற்றதும் அறிக. “தினற் பொருட்டால்” என்னும் குறளும் “பகுத்துண்டு” என்னும் குறளும் விளக்கந்தரும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்