சொல் பொருள்
கடலில் இருந்து வரும் காற்று உப்பங்காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கடலில் இருந்து வரும் காற்று உப்பங்காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு. உவர்த் தன்மை அமைந்ததும், நிலம் சுவர் ஆயவற்றை உவர்த் தன்மையால் உப்பி உயரச் செய்வதுமாம் அக்காற்று உப்பங்காற்று ஆயது. வயிற்றுப் பொறுமல், உப்புசம் என்பது எண்ணத் தக்கது. தென்கிழக்கு மூலையை உப்பு மூலை என்பதும் தென்னக வழக்காம். உப்பங்காற்று பயிர்களை நன்கு வளரச் செய்யும் என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்